உலக நலன் வேண்டி 108 திருவிளக்கு பூஜை
சூலுார்; உலக நலன் வேண்டி, 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை சூலுார் அடுத்த பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், நடந்தது. ஆசிரம தலைவர் சுவாமினி சிவஞானப்பிரியா விளக்கு பூஜையை நடத்தி வைத்து பேசுகையில், ''அனைவரும் இணைந்து திருவிளக்கு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்வதன் வாயிலாக எதிர்மறையான எண்ணங்கள் விலகி, நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும். இதன் மூலம் உலக உயிர்களுக்கு நன்மை கிடைக்கும்,'' என்றார். 108 திருவிளக்குகளுக்கு, பெண்கள் பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, உலக நலன் மேன்மையடைய பிரார்த்தனை செய்தனர். வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீதர், துர்கா மற்றும் ஜெயந்தி, பரிமளா உட்பட பலர் பங்கேற்றனர்.