உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி போனஸ் விரைந்து வழங்க 108 தொழிலாளர்கள் கோரிக்கை

தீபாவளி போனஸ் விரைந்து வழங்க 108 தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் '108' ஆம்புலன்ஸ் தொழிற்சங்கம்- சார்பில், தொழிலாளர் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், சாய்பாபா கோவில் பகுதியில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வினை விரைந்து வழங்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்து, அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும்.தீபாவளி போனஸ் விரைந்து வழங்க வேண்டும். நிர்வாக அதிகாரிகளின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகளை தடுத்து, சேவைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆம்புலன்ஸ்களுக்கு உரிய மருத்துவ உபகரணம் வழங்க வேண்டும். தகுதி இல்லாத ஆம்புலன்ஸ்களை சேவையில் இருந்து அகற்றி, தரமான புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழலில் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் திரட்டி தமிழ்நாடு முழுவதும், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜன், கோவை மண்டல செயலாளர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி