உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் 10வது ஆண்டு விழா சிறப்பு

சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் 10வது ஆண்டு விழா சிறப்பு

கோவை;தீத்திபாளையம் சி.எம்.சி., சர்வதேச பள்ளியின், 10வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு சி.எம்.சி., கல்வி நிறுவனங்களின் தலைவர் நாதன் தலைமை வகித்தார்.விழாவில், சிறப்பு விருந்தினராக மாற்றம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனரும், நேசனல் எச்.ஆர்.டி., நெட்வொர்க் நிறுவன தலைவருமான சுஜித்குமார் கலந்து கொண்டார்.மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி தொழிலில் சிறந்து விளங்குவது, அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து, அவர் பேசினார்.தொடர்ந்து, பள்ளியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, விருது மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். விழாவில், சி.எம்.சி., இன்டர்நேஷனல் பள்ளியின் செயலாளர் லீமாரோஸ், முதல்வர் பிரேமலதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை