பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது
அன்னுார்; 'அறிவியல் பாடத் தேர்வு எளிதாக இருந்தது,' என 10ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர். சென்டம் பெற வாய்ப்பு
தரணிஷ், பசூர்: அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண், கேள்விகள் 12, 2 மதிப்பெண் கேள்விகள் 7, நான்கு மதிப்பெண் கேள்விகள் 7, 7 மதிப்பெண் கேள்விகள் மூன்று என 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சென்டம் பெற வாய்ப்பு உள்ளது. பாடத்தின் உட்புறம் இருந்து கேள்வி
சஞ்சீவ்குமார், புள்ளாமடை:இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண் மற்றும் ஏழு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில் மூன்று கேள்விகள் கடினமாக இருந்தன. அதில் ஒரு கேள்வி பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.எளிதில் தேர்ச்சி பெறலாம். வகுப்பில் தரப்பட்ட மாதிரி வினா விடையிலிருந்து பல கேள்விகள் வந்திருந்தன அதிக மதிப்பெண் பெற முடியும்
விஷ்ணு பிரசாத், பொம்மம்பாளையம். ஏழு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. இரண்டு மதிப்பெண் மற்றும் நான்கு மதிப்பெண் கேள்விகளில் இரண்டு கட்டாய கேள்விகள் கடினமாக இருந்தன. எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம். பல கேள்விகள் வகுப்பில் ஆசிரியர் தெரிவித்ததில் இருந்து வந்திருந்தது.