உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 11 அடி மலைப்பாம்பு மீட்பு; வனப்பகுதியில் விடுவிப்பு

11 அடி மலைப்பாம்பு மீட்பு; வனப்பகுதியில் விடுவிப்பு

ஆனைமலை;ஆனைமலை அருகே கிழவன்புதுாரில், 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.ஆனைமலை அருகே, கிழவன்புதுார் பகுதியை சேர்ந்த லோகு, தோட்டத்தில் அன்றாட பணிகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது, தோட்டத்துக்குள், 11 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.தன்னார்வ அமைப்பை சேர்ந்த இருவர், சம்பவ இடத்துக்கு சென்று, மலைப்பாம்பினை லாவகமாக மீட்டு, வனத்துறை வாயிலாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ