| ADDED : பிப் 19, 2024 01:18 AM
கோவை;அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமில், 122 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, பொது மக்கள் கடந்த, 2016ம் ஆண்டு அக்.,20ம் தேதிக்கு முன், பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான சிறப்பு முகாம்கள், அந்தந்த மண்டல அலுவலகங்களில் நேற்று நடந்தது. வடக்கு மண்டலத்தில், 34, கிழக்கில், 22, மேற்கில், 29, மத்திய மண்டலத்தில், 21, தெற்கில், 16 என, 122 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும், 25ம் தேதியும் முகாம் இடம்பெறும் நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்களை வரும், 23ம் தேதிக்குள் பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவில் அளிக்குமாறு, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.