உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 17 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.24 ஆயிரம் அபராதம் விதிப்பு

17 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.24 ஆயிரம் அபராதம் விதிப்பு

கோவை;பூ மார்க்கெட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 17 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை தவிர்க்க, சுகாதார பிரிவினர் கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பூ மார்க்கெட்டில் உள்ள, 142 கடைகளில் நேற்று சுகாதார பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது, 115 கடைகளில், 17.800 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து ரூ. 24 ஆயிரத்து, 600 அபராதம் விதித்தனர். விதிமீறல் தொடர்ந்தால் 'சீல்' நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை