உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்

ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்

அன்னுார்; அன்னுார் பகுதியில் ஒரே நாளில் 18 பாம்புகள் பிடிபட்டன. அன்னுார் அருகே கஞ்சப்பள்ளி, கட்டபொம்மன் நகர், அல்லிக்காரம்பாளையம், சுப்பையா காலனி, அ.மு.காலனி ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் பாம்பு நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் இணைந்து அங்கு சென்று நாகப்பாம்பு, சாரைப்பாம்பு உள்ளிட்ட 1 8 பாம்புகளை லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட பாம்புகள் சிறுமுகை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே நாளில் 18 பாம்புகள் பிடிபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை