உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்

20 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேட்டுப்பாளையம்; அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அலுவலகம் ஒன்றில், 31 டவுன் பஸ்கள், 30 மப்சல் பஸ்கள் என மொத்தம் 61 பஸ்கள், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கிளை அலுவலகம் இரண்டில், 58 பஸ்கள், ஊட்டி, தஞ்சாவூர், மதுரை, சிவகாசி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளான நேற்று தஞ்சாவூர், மதுரை, சிவகாசி, திருச்சி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுதலாக 20 பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை