உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு, மாநகராட்சி பள்ளிகளில் 217 மாணவர்கள் சேர்க்கை

அரசு, மாநகராட்சி பள்ளிகளில் 217 மாணவர்கள் சேர்க்கை

கோவை: கல்விக்கு உகந்த நாளாக கருதப்படும் விஜயதசமியை முன்னிட்டு, கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பெற்றோர் பலர் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளிகளில் சேர்த்தனர். நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை 11,526 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். விஜயதசமி அன்று மட்டும் புதிதாக 139 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். எல்.கே.ஜி. 70, யு.கே.ஜி. 19, ஒன்றாம் வகுப்பு - 6, இரண்டாம் வகுப்பு - 6, மூன்றாம் வகுப்பு - 4, நான்காம் வகுப்பு - 7, ஐந்தாம் வகுப்பு - 3, ஏழாம் வகுப்பு - 3 மற்றும் எட்டாம் வகுப்பில் ஒரு மாணவர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதேபோல், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், இயங்கும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. நடப்பு கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக 59 வகுப்புகள் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. பிரிவுகளில் 1,702 மாணவ-, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். விஜயதசமியன்று மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக, 78 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இதில், 62 பேர் எல்.கே.ஜி. 16 பேர் யு.கே.ஜி. சேர்ந்துள்ளனர். மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7 மாணவர்கள், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 4 மாணவர்கள், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 2 மாணவர்கள், பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளியில், 4 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை