/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் திட்டத்தில் ரூ.9.3 கோடி கடன் மகிழ்ச்சியில் 225 சுய உதவி குழுக்கள்
மகளிர் திட்டத்தில் ரூ.9.3 கோடி கடன் மகிழ்ச்சியில் 225 சுய உதவி குழுக்கள்
கோவை: கோவை மாவட்டத்தில், மகளிர் திட்டம் சார்பில், கடந்த நான்கரை ஆண்டுகளில் காரமடை, பெ.நா.பாளையம், அன்னுார், சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு ஒன்றியங்களில் இணைய மானிய திட்டத்தின் கீழ், 225 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3.07 கோடி மானியத்தில், ரூ.9.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு சுய உதவிக்குழு அமைத்து அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் வங்கிக்கடன், குழுக்களை இணைத்தல் மூலமாக வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ரூ.9.30 கோடி கடன் உதவியில், ரூ.3.07 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.