இ-நாமில் ரூ.2.58 கோடிக்கு விளைபொருட்கள் விற்பனை
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாமில், 2.58 கோடி ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையானது.கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1,250 மெட்ரிக் டன் கொப்பரையை, 96 விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர்.தற்போது விற்பனை கூடத்தில், முதல் தர கொப்பரை கிலோ, 130 --- 138 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை கிலோ 90 -- 110 ரூபாய்க்கு விற்பனையானது.மேலும், இ-நாம் திட்டத்தின் வாயிலாக, 2,504.53 மெட்ரிக் டன் விளைபொருட்கள், 2.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 357 விவசாயிகள் மற்றும் 60 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.விற்பனை கூடத்தின் வாயிலாக, 4.52 கோடி ரூபாய் விவசாயிகளுக்கும், 3.51 கோடி ரூபாய் வியாபாரிகளுக்கும் பொருளீட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.