உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆடுகள் பலி

 மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆடுகள் பலி

நெகமம்: நெகமம் அருகே, தனியார் ஆட்டு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 ஆடுகள் உடல் கருகி இறந்தன. நெகமத்தை சேர்ந்தவர் நிதின், 20. இவர் காந்திநகர் பகுதியில் குப்பை கிடங்கு எதிரே ஆட்டுப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணை அருகே இவரது வீடும் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் முன்பாக இருந்த நாய் குரைத்ததால், நிதின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, ஆட்டுப் பண்ணை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகிலுள்ளவர்கள் உதவி யுடன் தீயை அணைக்க முயன்றுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இதில், பண்ணையில் இருந்த, 30 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன. ஆட்டுப்பண்ணையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்திருக்க அதிக வாய்ப்புள்ளது என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை