உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்; மாநகராட்சி நிவாரணம்

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்; மாநகராட்சி நிவாரணம்

கோவை:கோவையில், செப்டிக் டேங்க் விஷ வாயு தாக்கி உயிரிழந்த துாய்மை தொழிலாளி குடும்பத்துக்கு, மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.கோவை, சுங்கம் சிந்தாமணி பின்புறம் வசித்த, துாய்மை பணியாளர் மோகன சுந்தரலிங்கம் மற்றும் குணா, ராமு ஆகியோர், சில நாட்களுக்கு முன், சவுரிபாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். திடீரென விஷ வாயு வெளியேறியதில், மூவரும் மயக்கம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு, செல்லும் வழியிலேயே மோகன சுந்தரலிங்கம் உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இழப்பீடு கோரி பல்வேறு சங்கங்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, உயிரிழந்த மோகன சுந்தரலிங்கம் மனைவி லாவண்யாவிடம், மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் வழங்கினார். மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் சிவஞானம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க பொது செயலாளர் ரத்தினகுமார், ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை