மேலும் செய்திகள்
இன்று கிராம சபை சிறப்பு கூட்டம்
01-Aug-2025
அன்னுார்; கோவை மாவட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும், 100 நாள் வேலை திட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை நடைபெறுகிறது. ஒட்டர்பாளையம் ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட 33 பணிகளை தணிக்கையாளர் இம்மானுவேல் தலைமையிலான தணிக்கை குழு ஆய்வு செய்தது.தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று வேலை அட்டையை பரிசோதித்தனர். இன்று தணிக்கை அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதில் கண்டறியப்படும் குறைகள் அடங்கிய சமூக தணிக்கை அறிக்கை நாளை (8ம் தேதி) காலை 11:00 மணிக்கு ஒட்டர் பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
01-Aug-2025