உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் 35 மி.மீ. மழை

சிறுவாணியில் 35 மி.மீ. மழை

கோவை: கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. சில நாட்களால் மலை பகுதியில் கன மழை பெய்து வருவதால், கோவை குற்றாலத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி அணைக்கும் நீர் வரத்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 35 மி.மீ. அடிவாரத்தில் 13 மி.மீ. மழை பதிவானது. குடிநீர் தேவைக்காக 9.42 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, மாநகராட்சியின் மேற்குப்பகுதி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு நேற்று வினியோகிக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 38.18 அடியாக உயர்ந்திருக்கிறது. கோவையின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பில்லுார் அணை - 13, மேட்டுப்பாளையம் - 8, பெரியநாயக்கன்பாளையம் - 7, மதுக்கரை - 6, போத்தனுார் - 3.60 மி.மீ. பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை