மேலும் செய்திகள்
அன்புமணி ஆதரவாளர்கள் 47 பேர் அரியலுாரில் கைது
02-Jun-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தென்னங்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க.,வினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் அன்னூர் சாலையில் தென்னங்கன்று நடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து நேற்று ஊர்வலமாக கையில் தென்னங்கன்றுடன் சாலையில் நடும் போராட்டத்திற்கு அ.தி.மு.க.,வினர் புறப்பட்டு வந்தனர். இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்த வந்த அ.தி.மு.க.,வினரை மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி 36 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனிடையே அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட வருவதை அறிந்ததும், தி.மு.க.,வினரும் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தி.மு.க.,வினரோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.-------
02-Jun-2025