உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவை;கோவையில் ஆறு இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.ஈரோட்டை சேர்ந்த சதாசிவம், பாலசுப்ரமணியம் இணைந்து நடத்தும் கிரீன்பீல்டு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் அலுவலகம், பட்டணத்தில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் பிரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலுார் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகரில் அந்த நிறுவனத்தில் பணிபுரிவோர் தங்கி உள்ள வீடுகளிலும், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு என ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை