மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
04-Aug-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கிணத்துக்கடவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு டாஸ்மாக் மதுபானக்கடை அருகே, கூடலூரை சேர்ந்த மணிகண்டன், 45, என்பவரிடம் இருந்து, 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று, கிணத்துக்கடவு மயானம் அருகே, சிவகங்கையை சேர்ந்த ஜெயக்குமார், 35, என்பவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களும், சிக்கலாம்பாளையம் டாஸ்மாக் அருகே வடபுதுரை சேர்ந்த ராமு அய்யாசாமி, 43, என்பவரிடமிருந்து 21 மதுபாட்டில்களும், வடபுதூர் டாஸ்மாக் அருகே புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ், 32, என்பவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் என மொத்தம், 55 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
04-Aug-2025