உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 14 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 14 ஆண்டு சிறை

கோவை: கஞ்சா கடத்தல் வழக்கில், நான்கு பேருக்கு, தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த 2022, ஜூன் 29ல், சேலத்திலிருந்து கோவை நோக்கி வந்த லாரியை பைபாஸ் ரோடு அருகே சோதனை நடத்தினர். அந்த லாரியில் இருந்த சோள மூட்டைக்கு மத்தியில் மறைத்து வைத்து, 13 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக, உசிலம்பட்டியை சேர்ந்தை லாரி டிரைவர் மீனாட்சி சுந்தரம்,53, தவசி,59, லாரியின் உரிமையாளர் மதுரை உத்தப்ப நாயக்கனுாரை சேர்ந்த பூபாண்டி,35, ஈரோட்டை சேர்ந்த சவுந்தர்,32,ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீது கோவை இன்றியமையா பண்டக மற்றும் போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும், தலா 14 ஆண்டு சிறை, மொத்தம், ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி