மேலும் செய்திகள்
ஓவர் லோடு ஏற்றிய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்
08-Sep-2024
பொள்ளாச்சி : உரிய ஆவணங்களின்றி கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு சென்ற நான்கு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ், நேற்று பொள்ளாச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் இணைந்து, கோபாலபுரம், வளந்தாயமரம் உள்ளிட்ட தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இணை ஆணையர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, உரிய ஆவணங்களின்றியும், வரி செலுத்தாமல் அதிக கனிமவளம் ஏற்றி வந்த நான்கு டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளுக்கு, 3.21 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
08-Sep-2024