உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைக்கு வைத்த உரக்கரைசல் நீரை குடித்து 40 ஆடுகள் பலி

வாழைக்கு வைத்த உரக்கரைசல் நீரை குடித்து 40 ஆடுகள் பலி

தொண்டாமுத்தூர்; காளிமங்கலத்தில், வாழை தோட்டத்தில் உரக் கரைசல் நீரை குடித்து, 40 ஆடுகள் பலியாகின.ஆலாந்துறை அடுத்த காளிமங்கலம் கிராமத்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள விஜயகுமார் என்பவர், தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இப்பகுதிக்கு ஆடு மேய்க்க வருபவர்கள், இந்த தோட்டத்தில் வாழைக்கு பாய்ச்சும் நீரை, ஆடுகளுக்கு குடிக்க வைப்பது வழக்கம். விஜயகுமார், வாழைக்கு உரக்கரைசல் வைக்க உள்ளதால், இரண்டு நாட்களுக்கு இங்கு ஆடுகளுக்கு நீர் கொடுக்க வேண்டாம் என, நான்கு நாட்களுக்கு முன், ஆடு மேய்ப்பவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், காளிமங்கலத்தை சேர்ந்த சாவித்திரி, கண்ணம்மாள், விஜயா, மங்கலம் ஆகிய நான்கு பேரும், விஜயகுமார் கூறியதை மறந்துவிட்டு, வாழை தோட்டத்திற்கு சொட்டு நீர் குழாயில் விடப்பட்டிருந்த உரக்கரைசல் நீரை, ஆடுகளுக்கு குடிக்க கொடுத்துள்ளனர். இதனை குடித்த, 40 ஆடுகளும், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. ஆடுகளின் உரிமையாளர்கள், ஆடுகளை குழி தோண்டி புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை