உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி

கோவை: கோவை, கோவைப்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 63. ஓய்வுபெற்ற பேராசிரியர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அவர், கந்தசாமியின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பல வங்கி பரிமாற்றங்களை செய்துள்ளதாக கூறினார்.இதையடுத்து, வீடியோ காலில் அழைத்த மற்றொரு நபர், ரிசர்வ் வங்கி விதிகளை மீறி, கந்தசாமி பணபரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார். போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து கோர்ட் ஆவணங்களையும் காட்டினார்.பின், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்தனர். விசாரணை முடிந் தவுடன் பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் கூறினர்.அதை உண்மை என நம்பிய கந்தசாமி, அவரது வங்கி கணக்கில் இருந்த 40 லட்சம் ரூபாயை, ஆன்லைன் வாயிலாக அனுப்பினார். அதன் பின் பணம் திரும்ப வரவில்லை. கந்தசாமி புகாரின்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
நவ 18, 2024 06:25

தினமலரின் இந்த செய்திக்கு நன்றி இதன் வாயிலாக எதிர்காலமானவர்கள் இந்த பேராசிரியர் வேலை செய்த கல்லூரி கண்டுபிடித்து அவர் பணிபுரிந்த துறையின் படிப்புகளை படிக்காமல் இருக்க இது உதவும் ஏனென்றால் ஓய்வு பெற்ற பிறகு கூட நாட்டின் பிரதம மந்திரி தெரிவித்த பிறகு கூட இவ்வாறு ஏமாறும் ஒரு மனிதர் எவ்வாறு அடுத்தவர்களுக்கு நல்வழி காட்டியிருக்க முடியும்?


புதிய வீடியோ