சிறுவாணியில் 47 மி.மீ., ;மழை ஐந்து நாட்களுக்கு தொடரும்
கோவை : கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழைப்பொழிவு காணப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 47 மி.மீ., அடிவாரத்தில் 30 மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 41.52 அடியாக உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 9.9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.மாவட்டத்தின் இதர பகுதியில் பெய்த மழையளவு: பீளமேடு - 10.40 மி.மீ., வேளாண் பல்கலை - 8.20, பெரியநாயக்கன்பாளையம் - 11, அன்னுார் - 17.20, கோவை தெற்கு - 13, சூலுார் - 58, தொண்டாமுத்துார் - 20, வாரப்பட்டி - 61, மதுக்கரை - 10, போத்தனுார் - 11, பொள்ளாச்சி - 12, மாக்கினாம்பட்டி - 71, ஆழியாறு - 15.60, சின்கோனா - 13, சோலையாறு - 13 மி.மீ., மழை பதிவானது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''கொங்கு மண்டலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும். தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, வடமேற்கு நோக்கி நகர்கிறது. இது, கொங்கு மண்டலம், மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கேரளாவில் குறிப்பிடத்தக்க ஈரப்பதத்தை ஊடுருவச் செய்யும்,'' என்றார்.