உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பூசி போட 50 லட்சம் ரூபாய்

தடுப்பூசி போட 50 லட்சம் ரூபாய்

கோவை: கோவை நகரில் 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக, மாநகராட்சி கணக்கெடுத்துள்ளது. தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு நாய்களை கொண்டு செல்ல குழு ஒன்றுக்கு ஒரு வாகனம், ஒரு டிரைவர், ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் மூன்று நாய் பிடிப்பவர்கள் வீதம் இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நாள்தோறும் 400 நாய்களை பிடிக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இச்சூழலில், மத்திய அரசின் மீன் வளம் மற்றும் பால்வள அமைச்சகம் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையின் அறிவுறுத்தலை சுட்டிக் காட்டி, கால்நடை மருத்துவர் மற்றும் நாய் பிடிப்போருக்கு மாத சம்பளம் மற்றும் இதர செலவினங்களை ஏற்க, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை மருத்துவருக்கு மாத சம்பளம் ரூ.56,100, நாய் பிடிப்பவருக்கு 18,000, நாய் பிடிக்கும் வலை 2,500, அடையாள மை (40 நாய்களுக்கு) 150 ரூபாய் வீதம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, மாநகராட்சி பொது நிதியில் ரூ.13.27 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி