மேலும் செய்திகள்
வீடு புகுந்து 4 சவரன் திருட்டு
25-Oct-2025
நாகர்கோவில்: உதவி பேராசிரியை வீட்டில், 57 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர். கோவை மாவட்டம், ரெங்கநாயகி தெரு தெற்கு பாளையத்தை சேர்ந்த ஆக்ஸிடி எஸ் தர்ஷினி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக பணிபுரிகிறார். மருத்துவமனை வளாகத்தில், டாக்டர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். இவர், அக்., 30ல் கோவை சென்றார். நேற்று காலை, இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அதே குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ரஜினிஷ் சிங் கவனித்து அவருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, ஆக்சிடி எஸ் தர்ஷினி வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 57 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆசாரிப்பள்ளம் போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.
25-Oct-2025