மேலும் செய்திகள்
விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கல்
03-Jun-2025
கோவை; காமாட்சிபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவி கயல், தன் சிறு வயதிலும் 60க்கும் மேற்பட்ட திருக்குறள்களை துல்லியமாக ஒப்புவிக்கிறாள். நடனத்திலும் திறமையை நிரூபித்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.மாணவியின் திறமையைப் பற்றி பேசும் பள்ளி ஆசிரியர், 'ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறனையும் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளித்து வருகிறோம். இது போன்ற முயற்சிகள், அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்' என்றார்.
03-Jun-2025