உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 65 ஆசிரியர் பணியிடங்கள் காலி; வால்பாறை, ஆனைமலை வட்டாரங்களில் அதிகம்

கோவையில் 65 ஆசிரியர் பணியிடங்கள் காலி; வால்பாறை, ஆனைமலை வட்டாரங்களில் அதிகம்

கோவை; கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் வால்பாறை வட்டாரங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் அதிகரித்துள்ளன.நடப்பு கல்வியாண்டிற்கான இடைநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்த கலந்தாய்வு, ஜூலை 7ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அட்டவணை வெளியாகியுள்ளது.அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8 முதல் 10ம் தேதி வரை நடைபெறும். மாநிலம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை வட்டாரத்தில் கணினி பயிற்றுநர் (நிலை 1), பயாலஜி, வரலாறு உள்ளிட்ட பிரிவுகளில் 14 காலியிடங்கள் உள்ளன.ஆனைமலை - 10, கிணத்துக்கடவு - 4, அன்னூர் - 2, காரமடை - 9, சுல்தான்பேட்டை - 7, சூலூர் - 3, தொண்டாமுத்தூர் - 6, பொள்ளாச்சி (தெற்கு) - 2, பெரியநாயக்கன்பாளைம் - 2, மதுக்கரை - 3, பொள்ளாச்சி (வடக்கு) - 2, பேரூர் - 1 என, மொத்தமாக 65 இடங்கள் காலியாக உள்ளன.மாநில அளவில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தமிழ் பாடப்பிரிவுகளில் 380க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை