பூட்டியிருந்த வீட்டில் 7 சவரன் நகை மாயம்
கோவை; வெள்ளலுார் பகுதியில் வீட்டில் வைத்திருந்த, ஏழு சவரன் தங்க நகை மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த கோபி, 39; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளலுார் இ.வி.பி., பிரசிடென்ட் காலனியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கோபி குடும்பத்தினர் பொள்ளாச்சி சென்றனர். கோபி மட்டும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 8ம் தேதி கோபி வெள்ளலுாரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழு சவரன் தங்க நகை மாயாமகியிருந்தது. கோபி போத்தனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.