உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை

மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை

கோவை : மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, வேளாண் துறை எச்சரித்துள்ளது.கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்காக, யூரியா, டி.ஏ.பி., பொட்டாசியம், காம்பளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 11,429 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை, தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்கக் கூடாது.உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, கொள்முதல் செய்யவோ கூடாது. அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்கக் கூடாது. கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது.விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்கக் கூடாது. அனைத்துக்கும் முறையான அனுமதி தேவை.உர இருப்பு, விலை விவர பலகையை விவசாயிகள் பார்வையில் படும்வகையில் பராமரிக்க வேண்டும். தரமற்ற உரம் விற்பனை செய்யக்கூடாது.விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை