உள்ளூர் செய்திகள்

ரூ.75 லட்சம் மோசடி

கோவை;கோவை, செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் திலீப்குமார், 55. தங்க கட்டிகளை வாங்கி ஆபரணங்களாக வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறார். இவர் செட்டி வீதியை சேர்ந்த பாண்டியன், 45, என்பவரிடம் கடந்த ஆண்டு அக்., மாதம் 1734.390 கிராம் (216 பவுன்) தங்கத்தை கொடுத்து, ஆபரணங்களாக வடிவமைத்து தருமாறு கேட்டுள்ளார். அதில் பாண்டியன் 321.55 கிராம் தங்கத்தை மட்டும், ஆபரணமாக கொடுத்தார்.மீதமுள்ள ரூ.75 லட்சம் மதிப்புள்ள, 1412.840 கிராம் (176 பவுன்) தங்கத்தை கொடுக்கவில்லை. ஏமாற்றமடைந்த திலீப்குமார், தான் கொடுத்த தங்கத்தை திருப்பி தருமாறு பாண்டியனிடம் பல மாதங்களாக கேட்டும், தராமல் மோசடி செய்தார். திலீப்குமார் புகாரின் படி, செல்வபுரம் போலீசார் பாண்டியன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை