உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 9 கிலோ கஞ்சா கடத்தல்; போலீசார் விசாரணை

9 கிலோ கஞ்சா கடத்தல்; போலீசார் விசாரணை

கோவை; கோவை ரயில்வே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கோவை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் வந்தது.போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில், கேட்பாரற்று வெள்ளை பை ஒன்று கிடந்தது. போலீசார் அப்பையை கைப்பற்றி, பயணிகளிடம் விசாரித்தனர். பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. பையில் ஒன்பது கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை