உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குரூப்-4 எழுதுவோருக்கு வரும் 9ல் மாதிரி தேர்வு

குரூப்-4 எழுதுவோருக்கு வரும் 9ல் மாதிரி தேர்வு

கோவை;தமிழக அரசு துறை அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி - குரூப்-4ல், 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு, ஜூன் 9ல் நடைபெற இருக்கிறது.இத்தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்து வருகிறது. வரும், 9ம் தேதி கவுண்டம்பாளையம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள், விண்ணப்ப நகலுடன், மாதிரி தேர்வு நடத்தப்படும் 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு பங்கேற்று, மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்.விபரங்களுக்கு, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ