ரவுடியை வெட்டி கொன்ற வழக்கு; குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
கோவை: கோவை அருகேயுள்ள கொண்டயம்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்,25. இவர் மீது, 20 க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.கொலை வழக்கு ஒன்றில், கடந்தாண்டு பிப்., 13ல், கோவை கோர்ட்டில் ஆஜராகி விட்டு பின்புற நுழைவு வாயில் வழியாக சென்ற போது, மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக விக்ரம், சிவிக்சன் பெர்னார்டு, விஷ்ணு பிரகாஷ், பரணி சவுந்தர், ஹரிஹரன், கவுதம், அருண்குமார், கார்த்திக் பாண்டியன் உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, கோவை, நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரது தரப்பில். கோர்ட்டில் ஆஜராக இன்னும் வக்கீல் நியமிக்கப்படவில்லை. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்ந்து தள்ளி போகிறது. இதற்கிடையில், வக்கீல் நியமிக்க எதிர் தரப்புக்கு அவகாசம் அளிக்கப்பட்டு, அக்., 26க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.