உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வலுதுாக்கும் போட்டியில் இரு தங்கம் வென்ற கோவை வீரர்

தேசிய வலுதுாக்கும் போட்டியில் இரு தங்கம் வென்ற கோவை வீரர்

கோவை; ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டியில் கோவை வீரர் இரு தங்க பதக்கங்கள் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டி ஐதராபாத்தில் மூன்று நாட்கள் நடந்தது. 'வோர்ல்டு பவர்லிப்டிங் காங்கிரஸ்'(டபிள்யூ.பி.சி.,) சார்பில் நடந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து, 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தனியார் கல்லுாரியில் நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜி., பயிலும், கோவை, இடையர்பாளையத்தை சேர்ந்த மாணவர் ராம்குமார், 52 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். 'பென்ச்பிரஸ்' மற்றும் டெட்லிப்ட்' ஆகிய இரு போட்டிகளிலும்(150 கிலோ) தலா ஒரு தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.இவரது தந்தை 'பைக் ஒர்க்ஷாப்' பணியும், தாய் வீட்டு வேலைக்கு சென்றும் குடும்பம் நடத்தும் சூழலில், பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில், வலுதுாக்கும் போட்டியில் தமிழகத்தின் 'தங்கமகன்' ஆக ராம்குமார் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி