வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி!
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஊசிமலைத் தோட்டம் அருகே, விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக பலியானார். வட மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, தோட்டத்தில் இலையை பறித்துக் கொண்டு இருந்த போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.