மேலும் செய்திகள்
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
16-Aug-2025
மேட்டுப்பாளையம்; காரமடை - மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை யானை கூட்டம் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் காரமடையில் இருந்து தோலம்பாளையம் வழியாக வெள்ளியங்காடு, குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்கிறது. இதனால், இச்சாலையில் வன விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மஞ்சூர் வழியாக செல்வதற்கு இச்சாலை பயன்படுவதால், இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் மஞ்சூரில் இருந்து கெத்தை நோக்கி இரவு 8 மணி அளவில் ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது யானை கூட்டம் ஒன்று திடீரென்று அந்த பஸ்சை வழிமறித்தது. உடனே ஓட்டுநர் பஸ்சை நிறுத்தி விட்டார். யானைகள் பஸ் முன்பு சிறிது நேரம் நின்றன. அதன் பிறகு அந்த யானைகள் சாலையை விட்டு விலகி காட்டுக்குள் சென்று விட்டன. யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
16-Aug-2025