உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை; பதறியடித்து ஓடிய பக்தர்கள்

நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை; பதறியடித்து ஓடிய பக்தர்கள்

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில், நள்ளிரவில் ஒற்றைக் காட்டு யானை வந்ததால், பக்தர்கள் பதறியடித்து ஓடினர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.இந்தாண்டு, கடந்த, பிப்., 1ம் தேதி முதல், பக்தர்கள் மலையேறி வருகின்றனர். சித்திரை மாதம் துவங்கியுள்ளதால், தற்போது, மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று இரவு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில், மலையேறுவதற்காக வந்தவர்களும், மலை ஏறிவிட்டு கீழே இறங்கியவர்களும், கோவிலை சுற்றியுள்ள மண்டபத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கோவிலின் மேற்கு புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டுயானை பக்தர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பகுதிக்கு வந்தது. யானை வருவதை கண்ட பக்தர்கள் அங்கிருந்து ஓடத்துவங்கினர். சிறிது தூரம், பக்தர்களை யானை துரத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த ஒற்றை காட்டு யானை, அவ்வப்போது, இங்குள்ள உணவு கூடம், கடைகளை சேதப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை