உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கம்பன் கலை மன்றத்தின்  மாதாந்திர கூட்டம் 

கம்பன் கலை மன்றத்தின்  மாதாந்திர கூட்டம் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் சார்பில் மாதாந்திர கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின், 353வது நிகழ்வாக, 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற தலைப்பில் கூட்டம், லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. முதல் நிகழ்வாக, கலை நிகழ்ச்சிகளை ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி ஆசிரியர் கவிஞர் செந்திரு துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த நிகழ்வில், கம்பன் கலை மன்ற செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம் முன்னிலை வகித்து, கலை நிகழ்ச்சிகளில் அசத்தியமாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசாக நுால்களையும் வழங்கினார். நா.மூ., சுங்கம் ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் நித்தியானந்தன், வள்ளலாரின் கொள்கைகள் குறித்து பேசினார். முனைவர் மோகனசுந்தரம், 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற தலைப்பில் பேசினார்.கவிஞர் குமார் நன்றி கூறினார். கவிஞர் ரமேஷ் சென்னியப்பன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் நசீர் அகமது, ரவீந்திரன், காளிமுத்து செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ