உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூச்சியூரில் ஆணி பாத காலணியுடன் நடந்த பூசாரி

பூச்சியூரில் ஆணி பாத காலணியுடன் நடந்த பூசாரி

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வேட்டைக்கார சாமி கோவில் சிவராத்திரி விழாவில், ஆணி பாத காலணியுடன், கோவில் பூசாரி நடந்து சென்றார்.கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது பூச்சியூர். சிவராத்திரியையொட்டி இங்குள்ள மகாலட்சுமி, வீரபத்திரசாமி - தொட்டம்மாள், வேட்டைக்கார சாமி கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள், திருவிழாவில் பங்கேற்றனர்.நேற்று அதிகாலை, மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, வான வேடிக்கையுடன் ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்து, நடனமாடி, சுவாமியை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, வேட்டைக்கார சாமி கோவிலின் பூசாரி, 'பாதக்கொரடு' என்ற காலணிகளை அணிந்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ