உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் சிக்குவோரை மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

விபத்தில் சிக்குவோரை மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

கோவை;விபத்தில் காயமடைந்தவர்களை விரைந்து மீட்க உதவுவது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார துறை திட்டமிட்டள்ளது.விபத்தில் சிக்குபவர்களை, 'கோல்டன் ஹவர்' என்று சொல்லக்கூடிய முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதித்தால், உயிரை காப்பாற்ற முடியும்.போலீசாரின் விசாரணைக்கு அஞ்சி, விபத்தில் சிக்குபவரை பலரும் காப்பாற்ற தயங்குவதால், உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது.விபத்தில் காயமடைபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவோருக்கு எவ்வித தொந்தரவும் அளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.இருப்பினும், இன்னும் இந்த அச்சம் பொதுமக்களிடம் இருந்து நீங்கவில்லை. இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி