காரமடை ரயில்வே ஸ்டேஷனில் நிழற்குடை அமைக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் கோவைக்கு, ஐந்து முறை மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. காரமடையில் இருந்து காலை, 8:30, 11:05 மதியம், 1:15 மாலை, 4:55 மணிக்கு ஆகிய நேரங்களில் அதிகமான பயணிகள் கோவைக்கு பயணம் செய்கின்றனர். காரமடை ரயில்வே ஸ்டேஷனில் சிறிய அளவில் இருந்த பிளாட்பாரத்தை, 10 ரயில் பெட்டிகள் நிற்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்துள்ளனர். ஆனால், போதுமான அளவில் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், ரயிலுக்காக காத்து நிற்கின்றனர். எனவே ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரத்தின் தெற்கு பகுதியில், நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.