உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்

படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்

வால்பாறை; தேயிலை தோட்டத்தில் படம் எடுத்து ஆடிய ராஜநாகத்தை, வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனத்தில் விட்டனர்.வால்பாறை சாலக்குடி ரோட்டில் உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இங்குள்ள காலடி பிளாண்டேஷன் பகுதியில், 14 அடி நீளமுள்ள ராஜநாகம் படம் எடுத்து ஆடுவதாக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற சாலக்குடி வனத்துறையினர், தோட்டத்தில் படம் எடுத்து ஆடிய ராஜநாகத்தை, லாவகமாக பிடித்தனர். அதன் பின் அதிரப்பள்ளி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அதை விடுவித்தனர்.அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பை, வனத்துறையினர் உரிய நேரத்தில் பிடித்துச்சென்றதால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை