குடும்பத் தகராறில் விழுந்தது கத்திக்குத்து
கோவை; கோவை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் வைரவேல், 69. இவரது தம்பி சின்னதுரை. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 15ம் தேதி வைரவேல் குடும்பத்தினருடன் பழனிக்கு சென்றார். அப்போது அங்கு அவரது தம்பி சின்னதுரை வந்தார். தம்பி சின்னத்துரையிடம், வைரவேல், அவரது மகன், மாமனார் குறித்து பேசி, திட்டியதாக கூறப்படுகிறது . அதன் பின் வைரவேல், குடும்பத்தினருடன் கோவைக்கு வந்தார். இந்நிலையில், சின்னதுரையிடம், வைரவேல் பேசியது, அவரது மகன்கள் பாலாஜி மற்றும் கார்த்திக் ராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. கோவை வந்த இருவரும், பெரியப்பாவான வைரவேலிடம், பழனியி ல் தந்தை சின்னத்துரையை திட்டியது குறித்து கேட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கி, கத்தியால் குத்தி தப்பினர். படுகாயமடைந்த வைரவேலை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பாலாஜி மற்றும் கார்த்திக்ராஜா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.