உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெல்மெட் அணியாத மாணவர் விபத்தில் பலி

ஹெல்மெட் அணியாத மாணவர் விபத்தில் பலி

தொண்டாமுத்தூர்:மாதம்பட்டியில், முன்னால் சென்ற வேனை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.மாதம்பட்டி, அம்மன் நகரை சேர்ந்த மயில்சாமி என்பவரது மகன் லோகநாதன்,19. பேரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை, லோகநாதன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல், மாதம்பட்டியில் இருந்து பேரூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்று கொண்டிருந்த வேனை முந்த முயன்ற போது, வேனில் இடித்து, எதிர்திசையில் மாதம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த, தனியார் கல்லூரி பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி கொண்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே, லோகநாதன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பேரூர் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை