பள்ளத்தில் நிழற்கூரை; சீரமைக்க வலியுறுத்தல்
வால்பாறை; வால்பாறை அருகே, பயணியர் நிழற்கூரை பள்ளத்தில் இருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில் உள்ள பயணியர் நிழற்கூரை புதியதாக கட்டப்பட்ட நிலையில், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி சார்பில், மாணிக்கா மாதா கோவில் சந்திப்பில் பயணியர் நிழற்கூரை கட்டும் பணி, அரைகுறையாக கைவிடப்பட்டது. ரோட்டில் இருந்து பள்ளத்தில் நிழற்கூரை அமைந்துள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இதனால், பயணியர் பல மணி நேரம் ரோட்டில் காத்திருந்து, பஸ் பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நிழற்கூரை பணியை நிறைவு செய்து, பயணியர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.