உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள டிப்பர் லாரியால் பரபரப்பு; புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள டிப்பர் லாரியால் பரபரப்பு; புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள டிப்பர் லாரியால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டில் கடந்த மூன்று மாதங்களாக கேட்பாரற்ற நிலையில், டிப்பர் லாரி நின்று கொண்டுள்ளது. லாரியின் உரிமையாளர் யார், எதற்காக டிப்பர் லாரி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியாமல் உள்ளன.இது குறித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சின்னராஜ் கூறுகையில், டிப்பர் லாரி ஒரே இடத்தில் மூன்று மாதமாக நிற்பது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.வாகனத்தை யாராவது திருடிக் கொண்டு வந்து இங்கு நிறுத்தி உள்ளார்களா அல்லது வேறு குற்ற சம்பவங்களில் இவ்வாகனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்ற தகவல் தெரியவில்லை. வாகனத்தை பெரிநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலோ அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்திலோ நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ