உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.காரமடை சிக்காரம்பாளையத்தில் வசித்தவர் ஈஸ்வரன், 40; கூலித் தொழிலாளி. கடந்த, 2ம் தேதி ஒன்னிபாளையத்தில் தென்னை மரம் ஏறிய போது, தவறி விழுந்து காயம் அடைந்தார்.கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை