| ADDED : டிச 04, 2025 08:06 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி. இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக 19 வயது இளைஞர் ஒருவர், நண்பராக அறிமுகம் ஆகி உள்ளார். அவர் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் மாணவி வீட்டில், தனியாக இருந்துள்ளார். அப்போது இன்ஸ்டா நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார். இதை அதே பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து, மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்குச் சென்ற தாயார், அந்த இளைஞரை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மாணவியின் குடும்பத்தார் வேறு வீடு மாறிச் சென்றனர். இதனிடையே அந்த இளைஞர், நேற்று முன்தினம் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத போது, பர்தா அணிந்து மறுபடியும் வந்துள்ளார். மாணவியின் பெற்றோர், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.----