உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி மஞ்சள் நீர் அபிேஷக விழா

ஆடி மஞ்சள் நீர் அபிேஷக விழா

வால்பாறை; வால்பாறை ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், முதலாமாண்டு ஆடி மாத மஞ்சள் நீர் அபிேஷக விழா நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பக்தர்கள் மஞ்சள் நீர் எடுத்து, வால்பாறை நகரில் முக்கிய வீதி வழியாக சென்று, வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலை அடைந்தனர். அதன்பின், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஹிந்து அன்னையர் முன்னணி நகர தலைவர் ஸ்ரீதேவி, நகர துணைத்தலைவர் ரஞ்சிதா மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை